தொட்டிலில் தூங்கிய 45 நாட்களே ஆன குழந்தை கடத்தல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீடு புகுந்து பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீடு புகுந்து தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 45 நாட்களே ஆன ஆண் குழந்தையை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டட வேலை செய்யும் லட்சுமி என்பவருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மே மாதம் 21ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த ஆண் குழந்தையை, மருத்துவமனையில் பழக்கமான பெண், தனக்கு தெரிந்தவர்களுக்கு குழந்தை வேண்டும், பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை மறுத்துவிட்டு லட்சுமி குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். அவரை பின் தொடர்ந்து அடியாட்களுடன் வந்த பெண், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 45 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்தி சென்றார். குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்த போது குழந்தைக்காக ரூ.3 லட்சம் பணத்தை வீசி எறிந்துவிட்டு பெண்கள் குழந்தையுடன் தப்பி சென்றனர்.