×

#BREAKING கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு! கோவையில் அதிர்ச்சி

 

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல்போன 10 வயது சிறுமி கண்ணம்பாளையம் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்ட 10 வயது சிறுமி, 2 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைத் தேட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், பாலியல் கொலையா? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடத்தப்பட்ட சிறுமி, பள்ளபாளையம் பாரதிபுரம்  அருணகிரிநாதர் வீதியில் வசிக்கும் ரகுபதி- பவித்ரா தம்பதியினரின் மகள் தர்சினி என்பது தெரியவந்துள்ளது. சிறுமியை மர்மநபர் பைக்கில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை மர்மநபர்கள் கடத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர். ஒருவரை பிடித்து விசாரித்துவருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.