×

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது - குஷ்பு..!
 

 

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்துப் பதிவிட்டுள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு, பிரதமர் மோடி மற்றும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இணைந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "வெற்றி பெற என்ன தேவை என்பதை அவர்கள் காட்டிவிட்டார்கள். 

காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது. ராகுல் காந்தி அரசியலைவிட்டு விலக மற்றுமொரு வாய்ப்பும் காரணமும் இது" என்று பதிவிட்டுள்ளார். 

மற்றுமொரு பதிவில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுவிட்டது. சில தலைவர்கள்(மோடி, நிதீஷ்) வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர். மக்களுக்கு ஆற்றிய சேவை அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.