×

கேரளாவில் இன்று இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை..!

 

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் இறுதிவரை நீடிக்கும். இந்தாண்டு ஜூன், ஜூலையில் மழை பொய்த்த நிலையில், ஆகஸ்ட்டில் சற்று மழை பெய்தது. செப்., மழை படிப்படியாக குறையும் என்ற போதும், மாத இறுதி வரை மழை சற்று காணப்படும். தற்போது செப்., வெயில் சுட்டெரிக்கிறது.

இந்நிலையில் மாநிலத்தில் இன்று (செப்.,9) வரை இயல்பை விட வெப்பம் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனால் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முன்னெச்சரிக்கை விடுத்தது. அதிக வெப்பத்தால், வெப்பத்தின் தாக்கம், நீரிழப்பு உள்பட பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை நேரடியாக நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதை தவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டது.