×

வேலை தருவதாக புதுச்சேரி வரவழைத்து கேரள இளம்பெண்ணை...

 

திருவனந்தபுரம் தள்ளம்பளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கம்பெனி நிறுவனரும், கடலூர் மாவட்டம் குடிகாடு பகுதியை சேர்ந்தவருமான லட்சுமிகாந்தன் (42 வயது) என்பவரை வேலை தொடர்பாக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், 'பர்சனல் செகரட்டரி' வேலை இருப்பதாகவும், மாதச்சம்பளம் ரூ.1 லட்சம் தருவதாகவும் கூறி உள்ளார்.

இதையடுத்து அந்த பெண், உடைமைகளுடன் கடந்த மே மாதம் 20-ந்தேதி புதுச்சேரிக்கு வந்துள்ளார். 21-ந்தேதி அவரை, தொழிலதிபர் லட்சுமிகாந்தன் தனது காரில் அழைத்துக்கொண்டு கிருமாம்பாக்கம் ராதாநகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்தார்.

இந்த நிலையில் மே மாதம் 25-ந்தேதி லட்சுமிகாந்தன் இளம்பெண் தங்கி இருந்த அறைக்கு வந்து, தனக்கு அவசரமாக தேவைப்படுவதாக கூறி ரூ.5 லட்சத்தை அந்த பெண்ணிடம் பெற்றுள்ளார். அதன் பின்னர் லட்சுமிகாந்தன் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுபோதையில் இளம்பெண் தங்கி இருந்த அறைக்குள் வந்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து நேற்று முன்தினம் கிருமாம்பாக்கம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தொழிலதிபர் லட்சுமிகாந்தனை கைது செய்தனர்.