×

 தவெக அரசின் பட்ஜெட்டுக்கு கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ் புகழாரம்..!!

 

*அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் முதல்
 செயற்கை நுண்ணறிவு ( AI) மற்றும்
 எந்திரவியல் (Robotics)
 தொழில்நுட்பம்
 வரை  அனைவருக்குமான வளர்ச்சி பட்ஜெட்!”

தமிழகத்தின் உள் உற்பத்தியை அதிகரித்து, அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, SME/MSME, Startup, Entrepreneurship, AI மற்றும் Robotics உள்ளிட்ட எதிர்கால வளர்ச்சிக்கான துறைகளையும் ஊக்குவிக்கும் தொலைநோக்குப் பட்ஜெட்டாக தவெக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:

“ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது புள்ளிவிவரங்களில் மட்டுமல்லாமல், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்க வேண்டும். உள்ளூர் உற்பத்தி மற்றும் SME/MSME நிறுவனங்களின் வளர்ச்சி மூலம் வேலைவாய்ப்புகளையும் மக்களின் வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.

அதேபோல் Startup மற்றும் Entrepreneurship துறைகளை ஊக்குவிப்பது இளைஞர்களை வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோர்களாக மாற்றும்.

உலகம் AI, Robotics போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களை நோக்கி நகரும் நிலையில், தமிழக இளைஞர்களுக்கு புதிய திறன்களையும் உயர்தர வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாடு முதல் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி வரை அனைத்துத் தரப்பினரையும், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பட்ஜெட் இது.”

இவ்வாறு கனிமொழி சந்தோஷ் MLA தெரிவித்துள்ளார்.