திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் ஆட்சிக்கு கண்டமா?- கஸ்தூரி பரபரப்பு பேட்டி
திமுக ஆட்சியில் அரசியல் ரீதியாக கைதான முதல் பெண் நான் தான் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆமாம், இல்லை என ஏதாவது ஒன்றை சொல்லுங்கள். பேசா மடந்தையாக இருந்தால் உங்களுக்கு பேச விருப்பமில்லை என நினைக்கிறதா அல்லது பேச தெரியவில்லை என நினைக்கிறதா? இரண்டுமே மோசம்தான். ஒருவேளை அவருக்கு எழுதி கொடுப்பவர்கள் லீவா என தெரியவில்லை. தீபம் ஏற்றிவிட்டால் எய்ம்ஸ் வருமா, சோறு கிடைக்குமா என கேட்கிறாரே திருமாவளவன், சந்தனக்கூடு நடப்பதால் சோறு கிடைக்குமா என கேட்பாரா? அவர் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன். திமுக ஆட்சியில் அரசியல் ரீதியாக கைதான முதல் பெண் நான் தான். ஒருவேளை திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் ஆட்சிக்கு கண்டமா? அதனால்தான் ஒட்டக பூஜையெல்லாம் நடந்ததா என தெரியவில்லை” என்றார்.