கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- 2ஆம் நாள் விசாரணை நிறைவு
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் இரண்டாவது நாளாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரிடம் 2ம் நாளாக இன்று நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. நாளையும் விசாரணை தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மூன்றாவது நாள் விசாரணை தொடர்கிறது. நாளை காலை 10:30 மணிக்கு மீண்டும் அனைவரும் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜர் ஆகின்றார்கள். முதல் நாள் 9 மணி நேரம், இரண்டாவது நாள் ஆறரை மணி நேரம் என விரிவான விசாரணையாக நடந்து வருகிறது.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு பிறகு கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் படிப்படியாக அந்த துயரத்திலிருந்து விலகி, கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.