×

பணி ஆணை வழங்கும் போது முதலமைச்சர் கதறி அழுதார்- ஜோதிமணி

 

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படியே பணி ஆணை வழங்கும் நிகழ்வு எளிய முறையில் நடைபெற்றதாக கரூர் எம்பி ஜோதிமணி பேட்டியளித்துள்ளார்.


கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி எம்பி, “முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படியே பணி ஆணை வழங்கும் நிகழ்வு எளிய முறையில் நடைபெற்றது. உயிரிழந்தவரின் குடும்பத்தினர் முதலமைச்சரை சந்திக்கும் போது கண்ணீர் விட்டு அழுதபடி பணி ஆணைகளை பெற்றனர். முதலமைச்சரும் சில இடத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். இதுபோன்ற நிகழ்வுகளில் பொதுமக்களின் உணர்வுகள் பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசு நிகழ்ச்சியில் ஊடகங்கள் தவிர்க்கப்பட்டது. கரூர் துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் அவருடைய தரப்பின் கருத்து பற்றி தான் சொன்னாரே தவிர நீதி விசாரணை குறித்து எதுவும் சொல்லவில்லை. கரூரில் வேதனையும் வலியும் தான் இருக்கிறது. அதற்கு இந்த அரசு வேலை தீர்வு ஆகாது. கரூர் சம்பவத்தை அரசியலாக பார்க்கக் கூடாது. அரசுப் பணி அவர்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டி எழுப்ப ஒரு சிறிய நம்பிக்கை, பாதுகாப்பு அளிக்கும் ஆதரவு ” என்றார்.