கரூர் சம்பவம் - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு..!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் அடங்குவர். ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
தவெக தலைவர் விஜய், அக்கட்சி நிர்வாகிகள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் எனப் பல்வேறு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து கரூர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
அரசு தரப்பில் ஒருநபர் விசாரணை ஆணையமும், நீதிமன்றம் சார்பில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவும் அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் நடுநிலையான தீர்ப்பு கிடைக்காது என்று தவெக தரப்பு கருதுகிறது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த வெள்ளி அன்று விசாரணை நடைபெற்றது.
இருதரப்பு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதையடுத்து இன்றைய தினம் கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சிபிஐ விசாரணை கோரிய தவெகவின் வழக்கு, SIT அமைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு உட்பட 4 வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு.
உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறார்.