×

கரூர் சம்பவம் : இன்று ஆய்வை தொடங்கும் தேஜ கூட்டணி உண்மை கண்டறியும் குழு!

 
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான தேசிய ஜனநாயக கூட்டணி உண்மை கண்டறியும் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. ஹேமமாலினி எம்பி தலைமையிலான இந்த குழுவில், பாஜ, தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகளின் எம்பிக்கள் இடம்பெற்று உள்ளனர்.
இந்த குழுவினர் இன்று(செப்.30) கரூர் சென்று தமது ஆய்வைத் தொடங்குகின்றனர் என்று அக்குழுவில் இடம்பெற்ற சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறி உள்ளார்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு இன்று தமிழகம் வந்துள்ளது. கோவை விமான நிலையம் வந்த பாஜக எம்.பி.க்கள் குழுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை தாங்கியுள்ள ஹேமமாலினி எம்.பி. பதில் அளித்தார்.
செய்தியாளர்களிடம் ஹேமமாலினி கூறியதாவது,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழுவாக வந்துள்ளோம். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
கூட்ட நெரிசல் நடைபெற்ற பகுதியில் ஆய்வு செய்ய உள்ளோம். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க உள்ளோம். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளோம். இந்த சம்பவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு இது தொடர்பாக அறிக்கையை பாஜக தலைமைக்கு தாக்கல் செய்ய உள்ளோம்
இவ்வாறு அவர் கூறினார்.