×

கரூர் சம்பவம் மனதளவில் பாதிப்பு- கட்சியை கலைக்க விஜய் முடிவு?

 

தமிழக வெற்றி கழக கட்சியை கலைத்து விட நடிகர் விஜய் ஆலோசனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கரூர் பிரசார கூட்டத்தில் 41  பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து 34 மணி நேரத்துக்கு பிறகு வெளியே வந்தார் விஜய். காலையில் நீலாங்கரை இல்லத்தில் இருந்து தனது மற்றொரு இல்லமான பட்டினம் பாசத்திற்கு சென்ற நடிகர் விஜய் முக்கிய அரசியல் ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.  கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தலாமா என்கின்ற மனநிலையிலும் இருப்பதாக கூறப்படுகிறது. கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் விஜய், இந்த முடிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.