#BREAKING கரூர் சம்பவம்- அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது ஐகோர்ட்
கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்து உள்ளது.
கரூர் துயரம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆவணங்களையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் கரூர் காவல்துறை ஒப்படைக்கவும் ஆணையிட்டுள்ளது.
யார் இந்த அஸ்ரா கார்க்?
அஸ்ரா கார்க் 2004 பேட்ச் IPS அதிகாரி, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்தவர். இவர் ஒரு எலக்ட்ரிக் எஞ்சினியர். திருப்பத்தூரில் உதவி காவல் ஆணையராக பணியாற்றிய அஸ்ரா கார்க், தற்போது தமிழ்நாடு வடக்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல். கரூர் ஸ்டாம்பீட் சம்பவத்தை விசாரிக்க SIT தலைவராக மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நியமித்தது.
அஸ்ரா கார்க் IPS இன் முந்தைய விசாரணைகள்:
1. திருநெல்வேலி (2008-2010): எஸ்பியாக பணியாற்றியபோது கந்துவட்டி, கொடுத்தவர்களை கண்காணித்து, புகார்களை ஊக்குவித்து, அந்த பகுதியில் அதனை அழித்தார்.
2. மதுரை (2010-2012): மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்று, உத்தமபுரத்தில் தீண்டாமை சுவரை அகற்றுவதில் முக்கிய பங்காற்றினார். தலித்-பிற சாதியினர் இடையே சமாதானம் ஏற்படுத்தி, தலித்கள் கோயில் நுழைவை உறுதி செய்தார். இதற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.
3. CBI லஞ்ச வழக்கு (2019): தன்னை லஞ்சம் கொடுக்க முயன்றவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்தார்.
4. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அஸ்ரா கார்க், சென்னை வடக்கு கூடுதல் கமிஷனராக இருந்தபோது, BSP தமிழ்நாடு தலைவர் K. ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்தார். 2024 ஜூலை 5 அன்று சென்னை பெரம்பூரில் நடந்த இந்தக் கொலையில், 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
5. 2021 மதுரையில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் துணிந்து செயல்பட்டதற்காக உயர்நீதிமன்றத்தின் பாராட்டை பெற்றவர்.