×

#BREAKING கரூர் விவகாரம்- தற்காலிகமாக பணி வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவு

 

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாக பணி நியமனம் வழங்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்று 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் முதல்வர் விஜய் இன்று கரூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது. தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு விஜய் உதவலாம். அரசு பணிகள் வழங்குவது தவறான முடிவு என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசுப் பணி நியமனம் என்பது நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனக் கூறி, நாதக மற்றும் பாஜக நீர்வாகிக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரந்தனர் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இன்று அரசுப் பணி ஆணை வழங்க தடையில்லை, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தற்காலிக பணி வழங்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் வரை தற்காலிக பணி நியமனம் வழங்க வேண்டும், முதலமைச்சர் இன்று அரசாணை வழங்கும் நிகழ்வு நடைபெறலாம் எனக் கூறி இந்த வழக்கை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.