கரூர் விவகாரம்- விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்
தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. திட்டமிட்ட பணிகள் இருப்பதால், விஜய் தரப்பில் 15 நாள் அவகாசம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதை சிபிஐ நிராகரித்துள்ளது. வரும் 15ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் விஜய்க்கு மீண்டும் அனுப்பி உள்ளது. கரூர் துயர சம்பவம் தொடர்பான விவகாரத்தில் விசாரணைக்காக டெல்லிக்கு பதில் சென்னையில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் சிபிஐயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் விஜய்யின் கோரிக்கையை சிபிஐ நிராகரித்துள்ளது.
நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியை தொடங்கிய விஜய், இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுலா செல்ல விஜய் திட்டம் வகுத்தார். அந்த வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தி முடித்தார். அடுத்தாக கரூர் மாவட்டத்திற்கு காலதாமதமாக சென்ற நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் துடி துடித்து உயரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக முதலில் தமிழக சிறப்பு குழு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது. அந்த வகையில் சிபிஐ போலீசார் கரூரில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடதக்கது.