×

கரூர் விவகாரம்- தவெக மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு 2 நாள் எஸ்.ஐ.டி. காவல்!

 

தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அனுமதி கேட்ட நிலையில் இரண்டு நாட்கள் அனுமதி வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்  கழக பரப்பரைக் கூட்டத்தில்  விஜய் பேசும்போது ஏற்பட்ட நெரிசல் சிக்கி  41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்குமாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு அக்டோபர் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு புலனாய் குழுவுக்கு மாற்றப்பட்டதால் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்காக மதியழகன் கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1ல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கு தமிழக வெற்றிக் கழக வழக்குரைகள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை முடித்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த நிலையில் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை வைத்திருந்தோம். மேலும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரிக்க மன அளித்துள்ளதாக தெரிவித்தோம். அந்த மனுவின் மீதான விசாரணை நாளை தான் நடக்க உள்ளது என்பதால், இரண்டு நாட்கள் கஸ்டடியை எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி இருக்கிறார். இரண்டு நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி இருந்தாலும், வழக்கறிஞர்கள் உறவினர்கள் சந்திப்பதில் எந்த தடையும் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மாவட்ட செயலாளர் மதியழகன் சொந்தக் காரணுங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும், கஸ்டடி விசாரணையின் போது, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லவும் அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.