×

“கர்ப்பத்தை கலைக்க சொல்லிவிட்டு ஏமாற்றிவிட்டார்”- புகாரால் பறிப்போன கருப்பு முருகானந்தம் பதவி

 

'தன்னுடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து குழந்தை பெற்றுக் கொண்ட பின்னரும் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக' திருச்சியை சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாநிலச்செயலாளர் திவ்யா சேஷாத்ரி புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், தனது குழந்தைகளின் பள்ளிப் பதிவேடுகளில் அவரே பாதுகாவலராக (Guardian) கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இந்தத் தொடர்பின் காரணமாக தான் கர்ப்பமடைந்ததாகவும், ஆனால் தனது விருப்பத்திற்கு மாறாக கருவைக் கலைக்க அவர் கட்டாயப்படுத்தியதாகவும் திவ்யா சேஷாத்திரி தனது புகாரில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.  இந்தச் சம்பவங்கள் தொடர்பான அனைத்து மின்னணு (ஆடியோ, வீடியோ) ஆதாரங்களையும், சாட்சிகளின் விவரங்களையும் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாகபாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ், தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள இந்தப் புகாரில், இச்சம்பவம் குறித்து காலவரையறைக்கு உட்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை கருப்பு முருகானந்தத்தைப் பதவியிலிருந்து சஸ்பெண்ட் (இடைநீக்கம்) செய்ய வேண்டும் என்றும் திவ்யா சேஷாத்திரி வலியுறுத்தியுள்ளார். அதன்பேரில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தடாலடி நடவடிக்கையாக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கருப்பு முருகானந்தத்தை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.