×

பரபரப்புக்கு மத்தியில் சசிகலாவை சந்திக்கும் கருணாஸ்

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விரைவில் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலையான நிலையில், நேற்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலா வருகையையொட்டி அதிருப்தி அதிமுகவினர், அமமுகவினர் என பல ஆயிரம் பேர் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். அதே சமயம் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகிகளை அக்கட்சி தலைமை அதிரடியாக நீக்கி வருகிறது. இந்நிலையில் நடிகரும்
 

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விரைவில் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலையான நிலையில், நேற்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலா வருகையையொட்டி அதிருப்தி அதிமுகவினர், அமமுகவினர் என பல ஆயிரம் பேர் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். அதே சமயம் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகிகளை அக்கட்சி தலைமை அதிரடியாக நீக்கி வருகிறது.

இந்நிலையில் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் சசிகலாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் சசிகலாவை சந்திப்பார் என்றும் கூறபடுகிறது. முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரான கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளது. சசிகலாவுக்கு ஆரம்பம் முதலே ஆதரவாக பேசி வரும், தனக்கு சீட் ஒதுக்கியது ஜெயலலிதா. ஆனால் அதற்கு காரணமாக இருந்தவர் சசிகலா தான். சசிகலா எந்த பதவியில் இல்லாத போதே அதிமுகவை ஆட்டி படைத்தவர். அவரை அவ்ளளவு சாதாரணமாக எடை போடக் கூடாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.