×

“மத அரசியலை விட மோசமானது விஜய் அரசியல்”- கருணாஸ்

 

பாஜகவை விட மோசமான மத அரசியல் செய்கிறார் ஜோசப் விஜய் என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், “விஜயைவிட எனக்கு அனுபவம் அதிகம். நடிகர் விஜய் 30 ஆண்டுகால சினிமா வாழ்வில் மக்களுக்கு என்ன செய்தார்? முக்கியமான பிரச்சனைகளுக்கு விஜய் குரல் கொடுத்தாரா? தேர்தல் வந்த பிறகு ‘ஜோசப் விஜய்’ என கிறிஸ்தவராக அடையாளம் காட்டுவது ஏன்? விஜயின் அரசியல் மத அரசியலை விட மோசமானதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தி.மு.க. மீது குறை சொல்லியே ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பது மட்டமான அரசியல்” என்றார்.