×

கருணாஸ் யாத்திரை தடுத்து நிறுத்தம்… போலீசார் தம்மை கேவலப்படுத்துவதாக புகார்…

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் யாத்திரை சென்ற எம்எல்ஏ கருணாஸை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக ரத யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் புறவழிச் சாலை அருகே போலீசார் கருணாஸை தடுத்து நிறுத்தி யாத்திரைக்கு அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த, அவரது ஆதரவாளர்கள் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்
 

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் யாத்திரை சென்ற எம்எல்ஏ கருணாஸை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக ரத யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் புறவழிச் சாலை அருகே போலீசார் கருணாஸை தடுத்து நிறுத்தி யாத்திரைக்கு அனுமதி மறுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த, அவரது ஆதரவாளர்கள் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டு, கருணாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், பாமகவினர் நடத்திய போராட்டத்தில் பேருந்து, ரயில்கள் மீது கல்வீசி போராட்டம் நடத்தியதாகவும், அதை அனுமதித்த அரசு தனது நியாயமான பேரணியை தடுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், தாங்கள் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சென்றோம் என்றும், தங்களை சாலையில் நிறுத்தி போலீசார் கேவலப்படுத்து கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.