×

"படர்தாமரை உடலுக்கு நாசம்; பாஜக தாமரை தேசத்திற்கு நாசம்" - கருணாஸ்

 

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக, சிவகாசி அருகே திருத்தங்கல்லில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும்,   நடிகருமான  கருணாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், பொய் சொல்வது என்பது பாஜகவின் பிரதான ஆயுதமாக உள்ளது பாஜகவில் சேருபவர்கள் பல்வேறு குற்றப் பின்னணிகளை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  இதுதான் மக்களுக்கான ஆட்சியா? மக்களுக்கான கட்சியா? நம்மை ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் மோடி வகையறாக்கள் பிரிக்கிறார்கள்.  சாமிக்காக அரசியல் நடத்துவது பாஜக; பூமிக்காக அரசியல் நடத்துபவர் முதல்வர் ஸ்டாலின்.  

சசிகலாவுக்கு துரோகம் செய்தவர்கள் தான் இபிஎஸ்-  ஓபிஎஸ் . முக்குலத்தோரின் முதல் எதிரி பாஜக.  பாஜகவுக்கு யாரும் ஒற்றுமையுடன் இருக்கக் கூடாது.  தமிழகத்தை அழிக்க நினைப்பவர்கள் சர்வநாசம் ஆவார்கள்.  படர்தாமரை உடலுக்கு நாசம்;  ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம்;  பாஜக தாமரை தேசத்திற்கு நாசம் ; நமக்கு நாமே பாதுகாக்க வேண்டிய தேர்தல் இது.  தமிழகத்தின் சமூக நீதியை பாதுகாக்க,  இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.