×

கருமுத்து கண்ணன் மறைவு - சு. வெங்கடேசன், வைரமுத்து இரங்கல் 

 

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக தக்கார் பொறுப்பில் இருந்து வந்த கருமுத்து கண்ணன் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர் மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , தியாகராசர் நூற்பாலை ஆகியவற்றின் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் சித்திரை திருவிழாவில் கூட இவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்த கருமுத்து கண்ணனின் உடல் மதுரை கோச்சடையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள முக்கிய பிரமுகர்களும் , பொதுமக்களும் இன்று காலை முதல் அவருக்கு அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கருமுத்து கண்ணனின் உடல் நாளை மதியம்  நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காராக இருந்து வந்த கருமுத்து கண்ணனுக்கு  தமிழ்நாடு அரசு 2015 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் விருதை  வழங்கி கௌரவித்தது.  நடுவன் அரசு ஜவுளி குழு தலைவர் பதவியையும்  இவர் வகித்துள்ளார்.

மதுரையில் என் நண்பர்
கருமுத்து கண்ணன்
காலமாகிவிட்டார்

ஒரு கல்வித் தந்தை
ஒரு தொழிலரசர்
ஒரு சமூக அக்கறையாளர்
மீனாட்சியம்மன் கோயில் தக்கார் என்று மரணம் ஒரே கல்லில்
பல கனிகளை அடித்துவிட்டதே!

அனைவர்க்கும்
என் ஆழ்ந்த ஆறுதல்
எனக்கு யார் சொல்வது?என்று ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.