×

’கருமேகங்கள் கலைகின்றன’  திரைப்படத்தை காண ஆவலாக இருக்கிறேன் - அன்புமணி

 

’கருமேகங்கள் கலைகின்றன’  திரைப்படத்தை  காண்பதற்கு  ஆவலாக இருக்கிறேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

அருவி படத்தின் நாயகி அதிதி பாலன் , தங்கர் பச்சான் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன.  இப்படத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளையே தங்கர்பச்சான் திரை மொழி வழக்கமாக மக்கள் முன்னிலையில் படைத்துவரும் நிலையில் , கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த திரைப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சார்பில் வீர சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் சமீபத்தில் வெளியாகிய நிலையில் ட்ரெய்லரும் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.