☰
×

நாம் தமிழர் கார்த்திகா உட்பட 9 பேர் கோவை சிறையில் இருந்து விடுவிப்பு..!!

 

தாராபுரம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் அணியை சேர்ந்த கார்த்திகா போட்டியிட்டார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் விஜய் வாக்கு சேகரிக்க வந்த போது மறியலில் ஈடுபட்டதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் சாலை வலம் சென்ற பாதையில், அனுமதி அளிக்கப்படாத இடத்தில் இடையூறாக வைக்கப்பட்டிருந்த நாதக பேனரை அகற்றியபோது போலீசாரை அவதூறாக பேசியதாகவும் கூறி கார்த்திகா மீது 4 வழக்குகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து (அக். 20) கோவையில் உள்ள இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகா, அவரின் கணவர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்திருந்தனர்.

தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகாவின் இந்தக் கைதுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். தவிர திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கார்த்திகாவின் கைதுக்குக் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் கார்த்திகா உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில், கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று காலை கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமீன் பெற்ற கார்த்திகா உட்பட 9 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நாதக உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.