காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு- உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனையே நிறைவேற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் அறிவுறுத்தி இருந்தது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றத் தவறினால், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடும் சட்ட நெருக்கடி ஏற்படும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள கல் தூணில் தற்போது வரை தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், மலை அடிவாரத்தில் போலீசார் உடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.