×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த கார்த்திக்கு கார் பரிசு

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.


உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அந்த வகையில் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர். மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிகட்டு போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.   

இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் ரூ.3 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரருக்கான இரண்டாம் பரிசை பெற்ற அபி சித்தருக்கு பைக் மற்றும் ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்ற காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 11 காளைகளை பிடித்து 3ம் இடம் பெற்ற வீரரான பாசிங்காபுரத்தை சேர்ந்த ஶ்ரீதருக்கு இ-பைக் பரிசு வழங்கப்பட்டது.