×

“அவர்களை ஹீரோக்களாக ஆக்ககூடாது” – கார்த்தி சிதம்பரம் ட்வீட்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை ஹீரோக்களாக ஆக்ககூடாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும், இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மௌனம் காக்கிறார். அதனால், எழுவர்
 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை ஹீரோக்களாக ஆக்ககூடாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும், இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மௌனம் காக்கிறார். அதனால், எழுவர் விடுதலையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, கடந்த ஒரு வார காலமாக #ReleasePerarivalan என்பது ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நேரடி தொடர்பு இல்லாத பேரறிவாளன் எதற்காக இத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தமிழக திரையுலகினர் உட்பட பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சரின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை சட்டரீதியாக விடுதலை செய்ய முடியுமென்றால் விடுதலை செய்யலாம். #ReleasePerarivalan ஆனால் அவர்களை ஹீரோக்களாக ஆக்ககூடாது. அதே வேளையில் ராஜீவ்காந்தி அவர்களுடன் இறந்துபோனவர்களையும் நினைவு கூறவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.