×

கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்..!! எங்கே..? எப்போ தெரியுமா..?

 

கர்நா டகா - தமிழகம் இடையில் உள்ள நீண்ட கால பிரச்சினையான காவிரி நதி நீர் பங்கீடு பற்றியும்; மேகதாதுவில் அணை கட்டுவது பற்றியும் விவாதிக்க கர்நாடக அரசின் நீர்ப்பாசன துறை அதிகாரிகள், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், ‘நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி பெங்களூரில் வருகிற 3-ம் தேதி, கர்நாடக - தமிழக முதல்-மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்' என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்கு தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகராம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ம் தேதி கர்நாடகம் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறுகையில், “கர்நாடகாவில் 3 -ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார். கூட்டத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை காவிரியில் திறக்க வலியுறுத்தப்படும் மேகதாது அணையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம், அது நமது உரிமை” என்று கூறினார்.