×

“நீங்க நிறுத்துங்க நாங்களும் நிறுத்துறோம்” – தமிழக அரசின் அனைத்து திட்டங்களுக்கும் தடை கோரிய கர்நாடகா!

மேகதாது அணை விவகாரம் குறித்து அனைவரும் அறிந்ததே. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நீர் கிடைக்காது என தமிழ்நாடு அரசு வாதிடுகிறது. ஆனால் கர்நாடக அரசோ அணை கட்டினால் இரு மாநிலங்களுக்குமே நல்லது நடக்கும் என்பதால் திட்டத்தை எதிர்க்காதீர்கள் என வாதிடுகிறது. இரு மாநிலங்களும் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளன. இச்சூழலில் தமிழ்நாடு அரசின் அணை திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள
 

மேகதாது அணை விவகாரம் குறித்து அனைவரும் அறிந்ததே. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நீர் கிடைக்காது என தமிழ்நாடு அரசு வாதிடுகிறது. ஆனால் கர்நாடக அரசோ அணை கட்டினால் இரு மாநிலங்களுக்குமே நல்லது நடக்கும் என்பதால் திட்டத்தை எதிர்க்காதீர்கள் என வாதிடுகிறது. இரு மாநிலங்களும் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளன. இச்சூழலில் தமிழ்நாடு அரசின் அணை திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “காவிரி விவகார தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை விட கூடுதலாக எடுத்துக் கொள்ள உரிமை கிடையாது. ஆகவே காவிரி- வைகை-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்கக்கூடாது. அது மட்டுமல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த நீர் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது. மொத்தம் பங்கீடு செய்யப்பட்ட 483 டி.எம்.சி.க்கு மேல் இரு மாநில எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர் கர்நாடகத்துக்கு உரிமையானது என ஏற்கனவே தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்துக்கான அந்த நீரை மடை மாற்றி சேகரிக்கும் வகையில் அமையவுள்ள காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும். குறிப்பாக மேட்டுரிலிருந்து உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேகரிக்கும் சர்பகங்கா திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும். அதேபோல ராஜவாய்கால் வடிகால் நீர் பாசன திட்டம், நொய்யல் ஆறு நீர் திட்டம், கல்லணை வடிகால் நீர் திட்டம், தடுப்பணைகள் கட்டப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். எனவே இது போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த நிரந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல, மாநிலங்களுக்கு காவிரி நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது போக உபரியாக காவிரி படுகையில் மீதமுள்ள நீரை தங்களின் மாநில பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.மேலும், காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் மூலமாக 45 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது. இதனால் எங்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசின் ஆறுகள் இணைப்புத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.