×

கஞ்சா கடத்தியவர் தப்பிய விவகாரம் – உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

காரைக்கால் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கஞ்சா விற்பனை செய்தவரை வழக்குப்பதிவு செய்யாமல் பணம் பெற்றுக்கொண்டு விடுத்த உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, அம்மாநில டிஜிபி உத்தரவிட்டார். காரைக்கால் மாவட்டம் நிரவி காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின்போது, தமிழகத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கஞ்சா பொட்டலங்களுடன் பிடிபட்டார். இதனையடுத்து, அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் பின்னர் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இந்நிலையில், நிரவி காவல்நிலைய போலீசார் செல்வராஜிடம் பணத்தை
 

காரைக்கால்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கஞ்சா விற்பனை செய்தவரை வழக்குப்பதிவு செய்யாமல் பணம் பெற்றுக்கொண்டு விடுத்த உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, அம்மாநில டிஜிபி உத்தரவிட்டார். காரைக்கால் மாவட்டம் நிரவி காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின்போது, தமிழகத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கஞ்சா பொட்டலங்களுடன்

பிடிபட்டார். இதனையடுத்து, அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் பின்னர் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இந்நிலையில், நிரவி காவல்நிலைய போலீசார் செல்வராஜிடம் பணத்தை பெற்றுகொண்டு, கஞ்சா பொட்டலங்களையும், வாகனத்தையும் விடுவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக தகவல்கள் இடம்பெற்றிருந்த, காவல்நிலைய பொது பதிவேடும் மாயமானது. இந்த சம்பவம் குறித்து, பாமக நிர்வாகி தேவமணி என்பவர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்நிலையில், கடத்தலுக்கு

வழக்குப்பதிவு செய்யாமல் குற்றவாளி தப்பிக்க காரணமான நிரவி காவல்நிலைய உதவி ஆய்வாளர் குமரனை பணி இடைநீக்கம் செய்து, இன்று புதுச்சேரி மாநில டிஜிபி உத்தரவிட்டார். மேலும், 2 காவலர்களை பணிமாறுதல் செய்தும் அவர் உத்தரவிட்டார்.