பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினாரா?- குமரி மாவட்ட எஸ்பி இடமாற்றம்
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட SP R. ஸ்டாலின், IPS, தமிழக அரசு உத்தரவின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட SP R. ஸ்டாலின், IPS, தமிழக அரசு உத்தரவின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு துணை காவல் ஆணையராக பணியாற்றிய தினு அன்ஷுல் நாகர், IPS, கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்பி ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டு உண்மையா?
கேரளாவிற்குக் கடத்தப்படும் கனிமவள லாரிகளை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வந்தார்.நேர்மையான முறையில் விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கனிமவள மாஃபியாக்கள் மற்றும் லாரிகள் சங்கத்தினர் அவருக்கு எதிராகத் திரும்பினர். இதனால் கனிமவள ஆதரவாளர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து அவருக்கு இடமாற்றம் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டது.எஸ்பி ஸ்டாலினுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன. எஸ்பி ஸ்டாலின் அதிகார வரம்புகளை மீறிச் செயல்படுவதாகவும், தனிநபர் விளம்பரங்களுக்காக 'ரீல்ஸ்' மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்துவதாகவும் விமர்சித்துப் பேசினார். எஸ்பி ஸ்டாலினின் பெயரைக் கெடுக்கும் நோக்கில், அவர் பெண்களுடன் தொடர்பில் இருப்பது போன்ற சில போலிச் செய்திகளும் அவதூறுகளும் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, குமரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எஸ்பி ஸ்டாலினுக்குப் பலத்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.