சென்னையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நடத்திய ‘தீபாவளி’ நிகழ்ச்சியை திமுக எம்பி கனிமொழி புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் தீபாவளிக் கொண்டாட்டம் நடைபெற்றது. சேகர்பாபு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். விளம்பரத்தில் கனிமொழி பெயர் இடம்பெற்றிருந்தும் அவர் நிகழ்ச்சியை புறக்கணித்தார். துரைமுருகன் இல்லத் திருமணத்தில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டது சர்ச்சையான நிலையில், திமுக சார்பில் தீபாவளி கொண்டாட்டமா என்று சேகர்பாபுவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே அந்த தீபாவளி நிகழ்ச்சியில் உரையாற்றிய சேகர்பாபு, "தமிழகத்தில் இன்று நடந்து கொண்டிருக்கின்ற ஆட்சி நரகாசுரன் ஆட்சி. தமிழக வெற்றிக் கழக ஆட்சியை ஒழிக்கின்ற நாள்தான் நமக்கு தீபாவளி நாள். தோல்விகள் பல கண்டாலும் இந்த இயக்கம் துவண்டுவிடுவதில்லை" என்றார்.