“யாகாவா ராயினும் நாகாக்க..”- ஆ.ராசா பேசுக்கு கனிமொழி கண்டனம்
Sep 13, 2026, 11:03 IST
யாகாவா ராயினும் நாகாக்க... என்ற திருக்குறளை எக்ஸ் வலைதளத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பதிவிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில்திமுக தலைவர்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, “நிர்மல்குமார் அவன் மந்திரியா..? என்ன இழவு என தெரியவில்லை. குரங்கு மரத்துக்கு மரம் தாவுவது போல பல கட்சிகள் மாறியவர். எனக்கு அவர் யாருக்கு பிறந்தவர் என்று சந்தேகம் உள்ளது. இந்த தருதலை கூட்டத்துக்கு ஒரு முதலமைச்சர். கை, கால்களை ஆட்டுவதற்கா ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாய்” என பேசியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தநிலையில் திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” எனக் குறிப்பிட்டுள்ளார்.