×

“எங்க முதலமைச்சரா இருந்தா பண்ணி இருப்பேன்”- கோரிக்கை வைத்த பெண்களுக்கு கனிமொழி பதில்

 

பேருந்து நிறுத்திமிடத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்த பெண்களிடம், “எங்க முதலமைச்சரா இருந்தா பண்ணி இருப்பேன்” எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டார் திமுக எம்.பி கனிமொழி.

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் திமுக எம்.பி கனிமொழி கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்த பெண்கள், பேருந்து நிழற்குடை அமைத்த இடத்தில் ஏற்கனவே பேருந்துகள் நின்று செல்வதில்லை என குற்றஞ்சாட்டினர். பேருந்துகளே நின்று செல்லாத பேருந்து நிறுத்ததிற்கு புதிய நிழற்குடை எதற்கு? என்றும் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி எங்கள் பகுதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்த பெண்களிடம் "நம்ம  முதல்வராக இருந்தால் செய்யலாம்" என சர்ச்சையாக பதில் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பெண்கள் தி.மு.க எம்.பி.கனிமொழியை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சி மாறினாலும், இந்த தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தானே.. சும்மா பஸ் ஸ்டாப் திறந்தா போதுமா? பஸ் நிக்கிறதுக்கு வழி பண்ணுங்க என பெண் ஆவேசமாக கூறினர்.