சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது?- கனிமொழி
Aug 14, 2026, 16:35 IST
மக்களவை சபாநாயகர் தேநீர் விருந்தில் (டீ பார்ட்டியில்) திமுக எம்பி கனிமொழி பங்கேற்றதன் மூலம் பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி என்று தவெக விமர்சனம் செய்கிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, “சபாநாயகரின் தேநீர் விருந்தை இந்தியா கூட்டணி புறக்கணித்த நிலையில் திமுக பங்கேற்றது. சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது? நாடாளுமன்றத்தில் இருக்கையை மாற்றுவது குறித்து சபாநாயகரிடம் பேச சென்றோம். இந்தியா கூட்டணியில் திமுக இல்லை. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்தான் உள்ளது” என்றார்.