×

கனிமொழி பயணித்த விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு

 

தி.மு.க எம்.பி கனிமொழி ரஷ்யாவுக்கு பயணித்த விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்து உலக நாடு​களின் தலை​வர்​களிடம் ஆதா​ரத்​துடன் விளக்​கும்​வித​மாக சசி தரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​பிக்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​தது. இந்த 7 குழுக்​களில் 59 பேர் இடம் பெற்​றுள்​ளனர். இதில் 51 பேர் எம்​பிக்​கள், ஆவர். 8 பேர் வெளி​யுறவுத் துறை அதி​காரி​கள் ஆவர். பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை சேர்ந்த 31 எம்​பிக்​கள், எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த 20 எம்​பிக்​கள் 7 குழுக்​களில் இடம்​பெற்​றுள்​ளனர்.

இந்த நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி ரஷ்யாவுக்கு பயணித்த விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலால் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சில மணி நேரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நேரத்திற்குப் பின் பத்திரமாக தரை இறங்கியது.