காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்- நாளை முதல்வர் தொடங்கிவைக்கிறார்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடக்க விழாவை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்.
பெருந்தலைவர் ஐயா கர்மவீரர் காமராஜர் அவர்களின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள்..#CMJosephVijay #ThalapathyVijay pic.twitter.com/r7nLa8C6Tl
— Jegan ebi (@jeganebenezar1) September 21, 2026
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் அரசாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் அடுத்தகட்டமாக, 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. நாளை சென்னையில் மாண்புமிகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயன்பெற உள்ளனர்.
இதற்காக தமிழக அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளி கதவை திறந்து மாணவர்களின் வயிற்றுப் பசியோடு, கல்வி பசியையையும் போக்கிய காமராஜர் வழியில், எம்ஜிஆரின் வழியில் நடக்கும் முதலமைச்சர் விஜய், காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என பெயர் மாற்றம் செய்ததுடன், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.