×

எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது? – கமல்ஹாசன்

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு கேஸ் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு உருளையின் விலை இதுவரை ரூ.825-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அதன் விலை ரூ.850 ஆக உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சமையல் எரிவாயு விலை 2021-ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து தவணைகளில் ரூ.150 உயர்த்தப்பட்டுள்ளது. 5 மாதங்களில் ஐந்தாவது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். சமையல் எரிவாயு விலை தொடர்ந்து
 

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு கேஸ் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு உருளையின் விலை இதுவரை ரூ.825-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அதன் விலை ரூ.850 ஆக உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சமையல் எரிவாயு விலை 2021-ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து தவணைகளில் ரூ.150 உயர்த்தப்பட்டுள்ளது. 5 மாதங்களில் ஐந்தாவது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் அதன் மீதான மானியம் குறைந்து வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது?” எனக் குறிப்பிட்டுள்ளார்.