×

மகிழ்வான வாழ்க்கை வாழ சிறாருக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள் - கமல்ஹாசன்

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்காக சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இதேபோல் குழந்தைகள் தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.