“முதல் தேர்தலிலேயே பெருவெற்றி”- விஜய்க்கு கமல் வாழ்த்து
May 4, 2026, 19:44 IST
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், “தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.