×

“தேர்தலில் மநீம போட்டியில்லை; திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு” - கமல் அறிவிப்பு

 

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் தேர்தலில் போட்டியிடவில்லை  என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் தேர்தலில் போட்டியிடவில்லை  என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு இல்லை என்பதால் தேர்தலில் போட்டியில்லை எனக் கூறியுள்ள கமல்ஹாசன், தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், திமுக கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரிவு அளிப்பதாகவும் அறிவித்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது,  புறக்கணிக்கவும் மாட்டேன் என அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை எனக் குறிப்பிட்டுள்ளார்.