×

“தமிழகத்தை ஈசியாக எடை போட்டு விட முடியாது”- கமல்ஹாசன்

 

சினிமாவில் நான்  குழந்தை என்பது தான் என்னுடைய உண்மையான அடையாளம் என வேல்ஸ் குழுமம் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் எம்.பி. உரையாற்றினார்.

சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் வேல்ஸ் வர்த்தக கூட்ட அரங்கம், திரைப்பட நகரம் திறப்பு விழா வேல்ஸ் கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களின் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எம்.பி விழாவில் பங்கேற்று  எம்.பி  வேல்ஸ் வர்த்தக கூட்ட அரங்கம், திரைப்பட நகரத்தை திறந்து வைத்தார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழா மேடையில் உரையாற்றிய கமல்ஹாசன் எம்.பி, “அரசியலில் கேட்டால் கட்சி வித்தியாசம் இல்லாமல் ஐசரி கணேசன் என் நண்பர் என்று எல்லோரும் சொல்வார்கள். அந்த அளவுக்கு அனைவரிடமும் நட்பாக ஐசரி கணேஷ் பழகி வருகிறார். வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் நான் நடித்தது இல்லை என்னுடைய ராஜ்பிலிம் நிறுவனம் வேல்ஸ் நிறுவனமும் இணைந்து படம் தயாரித்தது இல்லை. ஆனால் நானும் ஐசரி கணேசும் நண்பர்கள் என்றால் நாங்கள் நண்பர்கள் ஆனதிற்கு எம்ஜிஆர் தான் காரணம். எம்ஜிஆர் தான் எங்களை நண்பராக சகோதரராக மாற்றினார். என்னுடைய உண்மையான அடையாளம் நான் சினிமாவில் குழந்தை என்பது தான் சினிமாவை தவிர வேறொன்றும் எனக்கு தெரியாது. 20,22 வருஷத்துக்கு முன்னாடி சினிமா தேய்ந்து கொண்டே போகிறதோ என்ற எண்ணம் எனக்குள் வந்தது ஆனால் 20 பெரிய அரங்குகளை படப்பிடிப்பு தளமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பை  என்னால் பார்க்க முடியுமா என்று எனக்குள் பயம் இருந்தது ஆனால் இன்று வேல்ஸ் குழுமம் அந்த பொறுப்பை ஏற்றுள்ளது.

PAN இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னை தான். மும்பை பெரிய திரைப்பட நகரமாக இருந்தாலும் அவர்கள் அவர்கள் மொழியில் மட்டும் தான் பாடம் எடுப்பார்கள். ஆனால் சென்னையில் பல மொழிகளில் படம் தயாரித்து சினிமாவில் கொடி நாட்டியவர்கள் பலர் உண்டு. 6 நிதியமைச்சர்களை இந்தியாவிற்கு தந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு தமிழகத்தை ஈசியாக எடை போட்டு விட முடியாது” என்றார்.