“மு.க.ஸ்டாலின் சொல்படி செயல்படுவேன்” - கமல்ஹாசன் எம்.பி.
இந்தியா கூட்டணியில் தமிழர்களுக்கு மிக நெருக்கமான ஆளுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். எனவே அவரது சொல்படியே செயல்படுவேன் என எம்.பி.கமல்ஹாசன் கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் தமிழர்களுக்கு மிக நெருக்கமான ஆளுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். எனவே அவரது சொல்படியே செயல்படுவேன் என எம்.பி.கமல்ஹாசன் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுதான் என்னுடைய முடிவு என்றும் தெரிவித்தார்.