"எங்கள் துறையில் இருந்து வந்து விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது"- கமல்ஹாசன்
May 13, 2026, 15:01 IST
எங்கள் துறையில் இருந்து வந்து விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது என எம்பி கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், “புதிய அரசுக்கு வாழ்த்துக்கள். மதுபான கடைகளை மூட வேண்டும் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. நீண்ட நாட்களாக பேசி கொண்டு இருந்தது நடைமுறைக்கு வந்து இருக்கிறது. வாழ்த்துக்கள். திரைப்பட நடிகராக மட்டும் பார்க்க வேண்டாம். வேறு கடமைகளை பார்க்க வேண்டும். எந்த துறையில் இருந்தும் வரலாம். எங்கள் துறையில் இருந்து வந்தது பெருமையாக உள்ளது. அதிமுகவில் ஒரு பிரிவிடம் ஆதரவு தானே கேட்டு உள்ளார்” என்றார்.