×

“ஒட்டுமொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி, கூட்டணியை விட கொள்கையே முக்கியம்”- கமல்ஹாசன்

 

 

ஒட்டுமொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி, கூட்டணியை விட கொள்கையே முக்கியம் என மக்கள் நீதி மய்ய கலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தமிழனாக நல்ல கருத்தை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். என் கருத்தை மறுப்பவர்கள் விவாதிக்கட்டும். நல்ல கருத்து விவாதத்திற்கு உள்ளாக வேண்டும். தமிழனாக நல்ல கருத்து பேசிவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அதனை மறுப்பவர்கள் அதை விவாதிக்க வேண்டும். விவாதித்து உண்மை என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகம் இப்படித்தான் இருக்கும்; விவாதங்கள் தொடர வேண்டும். மொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி. கூட்டணியை விட எனக்கு கொள்கைதான் முக்கியம். ஜனநாயகத்தில் விவாதங்கள் இயல்புதான்” என்றார்.