“வெற்றி வரும், தோல்வி வரும்; அதோடு ஜால்ராவும் வரும்”- கமல்ஹாசன்
வெற்றி வரும், தோல்வி வரும்; அதோடு ஜால்ராவும் வரும். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு வளர்ச்சிப் பாதையில் பயணித்தவர்கள்தான் பாரதிராஜா, பாக்யராஜ் என கமல்ஹாசன் எம்பி கூறியுள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன் எம்பி, “இந்திய சினிமா உலகிலேயே அதிகமான திரைப்படங்களை தயாரிக்கிறது. அரசுகளின் உதவியுடன் சினிமாவை மேலும் ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய விருதை ஒரு திரைப்படத் தொழிலாளி பெறும் நாளை நான் நேரில் காண வேண்டும். வெற்றி வரும், தோல்வி வரும்; அதோடு ஜால்ராவும் வரும். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு வளர்ச்சிப் பாதையில் பயணித்தவர்கள்தான் பாரதிராஜா, பாக்யராஜ்.பாரதிராஜா தனி மனிதர் அல்ல; சினிமாவில் ஒரு பெரிய குடும்பம். அவரை வெறும் இயக்குநர் என்று எப்படி சொல்வது?அவரை நான் பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். அவரென் குடும்பம். பலமுறை என் வீட்டில் வந்து படுத்து தூங்கியிருக்கிறார். அவரை வெறும் இயக்குநர் என்று எப்படி சொல்வது? அவர் என் குடும்பம்.பாரதிராஜா, பாக்யராஜ் இருவருடனும் பணியாற்றியவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.இருவருமே தமிழ் சினிமாவின் அடையாளங்கள். இருவரும் தமிழ் சினிமாவில் ஆழமாக வேரூன்றியவர்கள். பாரதிராஜா தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் அளித்தவர். தோல்விகளுக்கு அஞ்சாதவர். பாரதிராஜா போல ஒரு கலைஞன் இல்லை என்று இயக்குநர் கே.பாலசந்தர் கூறுவார். அப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் பயணித்தது எனக்கு பெரும” என்றார்.