கமல்ஹாசனின் மநீம கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கீடு..!
Jan 23, 2026, 07:45 IST
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து கட்சிகள் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிட்ட நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. வரும் பேரவைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணியில் போட்டியிடும் என்றே கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீட்டைப் பொருத்து மக்கள் நீதி மய்யம் எந்த சின்னத்தில் போட்டியிடும் என்று தெரியும்.