×

பாஜக விமர்சனத்திற்கு கமலஹாசனின் 'ஸ்டைலிஷ்' பதிலடி..!

 

மநீம கட்சித் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் நல்ல கருத்துக்கள் விவாதத்திற்கு உள்ளாக வேண்டும். ஒரு தமிழனாக நாடாளுமன்றத்தில் நல்ல கருத்தை பேசியதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள் விவாதிக்க வேண்டும். விவாதம் செய்து உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு ஜனநாயகம், இப்படித்தான் இருக்கும், விவாதங்கள் தொடர வேண்டும்" என்றார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு, "மக்கள் நீதி மையம் கட்சியின் கூட்டணி மொத்த இந்தியாவுக்கானது. இந்தியா தான் எனது நலன், கூட்டணி பேச்சு வார்த்தை எல்லாம் 5 வருடங்களுக்கு ஒரு முறை பேசுவது, எனக்கு கொள்கைதான் முக்கியம். அதை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தல் திட்டம் குறித்து தற்போது உங்களிடம் தெரிவிக்க முடியாது" என்றார்.

நாடாளுமன்றத்தில் கமலஹாசன் ஆற்றிய உரை யாருக்கும் புரியவில்லை என்ற பாஜகவினரின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, "அது குறித்து நான் பலமுறை பேசி விட்டேன். நான் அதிகம் படிக்க வேண்டும்" என்றார்.