ராமதாஸ், வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கமல்ஹாசன்..!
பாமக நிறுவனர் ராமதாஸிற்கும் அவரது மகன் அன்பு மணி ராமதாஸிற்கும் இடையே உட்கட்சி பிரச்சனை என்பது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இதன் காரணமாக பாமக கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். மேலும், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்தும் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார் ராமதாஸ். அதேபோல, அன்புமணியும், ராமதாஸின் ஆதரவாளர்களை நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்புகளில் நியமித்தும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்த சூழலில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, அன்புமணி நேரில் சென்று நலம் விசாரித்தார். அதே போல் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினும் மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இன்று காலை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.