“அண்ணா பெயரை வைத்து பிச்சை எடுக்கிறார்கள்”- விஜய்யை விமர்சித்த கமல்ஹாசன்
கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும், அது சட்டமாக்க வேண்டும், இனி நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று கமல்ஹாசன் கூறினார்.
திமுக மாணவர் அணி சார்பில் எங்கள் கல்வி எங்கள் உரிமை மாநில கல்விக்கொள்கை கருத்தரங்கம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியின் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் என்ன சொல்கிறது மாநிலக் கல்விக் கொள்கை? என்ற கையேடை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டனர். திமுக மாணவர் அணி சார்பில் 4 ஆண்டுகள் தமிழக பள்ளி கல்விதுறை சாதனைகள் குறித்து காணொளி வெளியிடப்பட்டது.
கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், “கல்வி மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.50 வருடமாக கோபப்பட்டு விட்டோம்.தற்போது அது சட்டமாக கொண்டு வர வேண்டும். If it is possible it must beatup, if it is impossible it can be done என்ற ஒரு ரஷ்ய பழமொழி உள்ளது. அந்த ரஷ்ய மண்ணில் பிறந்த வீரனின் பெயர் கொண்ட நம்முடைய முதல்வர். மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம் இரு மொழிக் கொள்கை. ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மூன்று மும்மொழிக் கொள்கை கூறப்பட்டுள்ளது. ஒன்று தாய்மொழி, இன்று ஒன்று ஆங்கிலம், மற்றொரு மொழி கற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு மொழி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் என்னை என்னையே ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டால் எனக்கு ஆறு மொழி தெரியும். எனக்கு வேண்டிய மொழியை கற்றுக் கொண்டேன், எனக்கு தேவைப்படும்போது... ஆனால் என்னுடைய தாய் மொழி தமிழ் தான்.
சிலர் அண்ணா பெயரை வைத்துக் கொண்டு பல்லாக்கில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என் கனவு நீயும், திராவிடன் என்பதை உலகம் முழுவதும் தேட வேண்டும். நான் எல்லா வேஷம் கட்டி உள்ளேன். நீ எனக்கு வேஷம் கட்ட வேண்டாம். நான் வேஷம் கட்ட சொல்லி டைரக்ட்மும் செய்து உள்ளேன். மீன் மீன் என அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் வாட் யூ மீன் பை மீன். மீன் எங்கள் கொடியில் இருக்கும்,புலி எங்கள் நெஞ்சில் இருக்கும், வில் எங்கள் கையில் இருக்கும்.வில் இருந்தால் வழி உண்டு. அதை தான் செய்துக்கொண்டு உள்ளோம் அதைத்தான் தொடர்ந்து செய்வோம் அதற்கு தோள் கொடுப்பதில் எனக்கு எந்த பயமும் இல்லை அது என் கடமை.சரித்திரம் வேறு புராணம், வேறு என்பதை புரிந்த யாம்...என் பேரை கமல்.கமல்ஹாசன்.இந்த குளத்தில் தான் பூப்பேன்” என்றார்.